>>
பிரபல நடிகர் மனோபாலா இன்று காலமானார்

பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா இன்று காலமானார். ஆகாய கங்கை, ஊர்க்காவலன், மல்லுவேட்டி மைனர், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய மனோபாலா, சந்திரமுகி, பிதாமகன், பேரழகன், ரமணா, சேது உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிரபல காமெடி நடிகர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

பிரபல மலையாள நடிகர் மம்முகோயா உடல் நலக்குறைவால் காலமான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

ஐந்து முறை பஞ்சாப் முதல்வராக இருந்த திரு.பிரகாஷ் சிங் பாதல் அவர்களது மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், தேச நலனிற்கும் அவர் ஆற்றிய பணியை நினைவு கூர்கிறேன்.

- அமைச்சர் அர. சக்கரபாணி (உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை)

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

உடல்நலக்குறைவால் காலமான மலையாள நடிகர் இன்னொசென்ட் உடலுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மரியாதை செலுத்தினார்

2014-19 ஆண்டுகளில் சாலக்குடி தொகுதியில் இடதுசாரி கூட்டணி ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி. ஆக தேர்வானார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

திருச்சி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித்துறை)

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகர் காலமானார்

பழம் பெரும் நடிகர் சமீர் காகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமீர் காகர் இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் 71 வயதில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரது சகோதரர் கணேஷ் காகர் உறுதிப்படுத்தி உள்ளார். நடிகர் சமீர் காகர் ஏற்கனவே சிறிநீரக பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் அவருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார்.

அவர் சஞ்சய் தத், எஸ்ஆர்கே, மிதுன், தர்மேந்திரா போன்ற பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளார் .

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து மரணம் - வீடியோ இணைப்பு 

ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து இறந்தார். 21 வயதான முஸ்தபா சைல்லா உள்நாட்டு லீக் ஆட்டத்தின் போது சோல் எஃப்சி கால்பந்து கிளப்க்கு எதிராக ரேசிங் கிளப் அபிட்ஜானுக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து இறந்தார். 

இந்த சம்பவத்தை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கால்பந்து வீரர் சைல்லா முதலில் தடுமாறி தரையில் விழுந்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். 

ஐவரி கோஸ்ட்டின் டபூவில் உள்ள முனிசிபல் கல்லறையில் சில்லாவின் உடல் வரும் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

கால்பந்து வீரர் கண்டனம் 

கால்பந்து வீரர் சைல்லா கால்பந்து வீரரின் மரணம் குறித்து, முன்னாள் ஐவரி கோஸ்ட் மற்றும் செல்சி வீரர் டிடியர் ட்ரோக்பா, இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களிலிருந்து வீரர்களைப் பாதுகாக்க பலவற்றைச் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஐவோரியன் கால்பந்துக்கு இரங்கல்கள். நான்கு ஆண்டுகளுக்குள் தொழில்முறை லீக் வீரர்கள் மூன்று பேர் இறந்துள்ளனர். ஒவ்வொரு தொழில்முறை வீரருக்கும் கட்டாய மருத்துவ சிகிச்சைகள் செய்ய வேண்டும். இரத்த பரிசோதனைகள், இசிஜிகள், மன அழுத்த சோதனைகள் முறையாக எடுக்கப்பட்டு  அவர்களுக்கான மருந்துகள் முறையாக வழங்கப்பட வேண்டும். 
 

இங்கே கிளிக் செய்து வீடியோ பாருங்கள்  

???

வீடியோ 

 

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக் குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 14 )   NEXT |  LAST