>>

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன்(68)
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

ஒடிசா அமைச்சர் நபா தாஸின் உடல் தகனம்

ஞாயிறன்று காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஒடிசா அரசு அறிவிப்பு

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Tik Tok மற்றும் Reels புகழ் டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டார்

டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தனது பிறந்தநாளன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது நடனத்தின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான ரமேஷ், அஜித்தின் துணிவு படத்தில் ஆடியிருந்தார். ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னை கேபி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்

தமிழ் திரை உலகின் மூத்த சண்டை பயிற்சியாளர் மற்றும் நடிகர் ஜூடோ ரத்தினம் (வயது 94) வயது மூப்பின் காரணமாக வேலூரில் உள்ள
குடியாத்ததில் காலமானார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி திடீர் மரணம்

கலிபோர்னியா: கோல்டன் குளோப் விழாவில் பங்கேற்ற ஹாலிவுட் பாடகி லிசா மேரி பிரெஸ்லி உடல் நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார்.ஹாலிவுட் பாடகியும், பாடலாசிரியுமான லிசா மேரி பிரெஸ்லி (54), கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதையடுத்து அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த தகவலை அவரது அம்மா பிரிசில்லா பிரெஸ்லி உறுதிப்படுத்தினார். அவர் வெளியிட்ட பதிவில், ‘எனது மகள் லிசா மேரி பிரெஸ்லி எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.  லிசா மேரி பிரெஸ்லியின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற கோல்டன் குளோப் விழாவில் லிசா மேரி பிரெஸ்லி பங்கேற்றார். அதில் தனது மறைந்த தந்தை மற்றும் புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் பாடலை, தனது தாயுடன் இணைந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. லிசா, மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி ஆவார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 14 )   NEXT |  LAST